
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பு சாதனையை படைத்துள்ளனர்.
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதனத்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 212 ரன்களையும், தென் ஆப்பிரிக்க அணி 138 ரன்னிலும் என ஆல் அவுட்டானது. இதையடுத்து 74 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் நட்சத்திர வீரர்கள் சோபிக்க தவறினர்.
அந்த அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மிட்செல் ஸ்டார்க் 5 பவுண்டரிகளுடன் 56 ரன்களையும், அலெக்ஸ் கேரியும் 5 பவுண்டரிகளுடன் 43 ரன்களை எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்கவில்லை. இதனால் அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 207 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதையடுத்து 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணியானது விளையாடி வருகிறது.