
Starc considering putting his name up for IPL mega auction (Image Source: Google)
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். இவர் கடந்த 2014, 2015 ஆண்டுகளில் ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளார்.
இதுவரை 27 ஆட்டங்களில் 34 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ஆனால் கடந்த சில வருடங்களாக ஐபிஎல் போட்டி நடைபெறும் ஏப்ரல், மே மாதங்களைத் தன் குடும்பத்தினருடன் செலவழிக்கப் பயன்படுத்திக்கொள்கிறார் ஸ்டார்க். அவருடைய மனைவி அலிஸா ஹீலி, மகளிர் ஆஸி. அணியின் விக்கெட் கீப்பராக உள்ளார்.
இந்நிலையில் பிப்ரவரியில் நடைபெறும் ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்துகொள்ள ஸ்டார்க் விருப்பம் தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஐபிஎல் 2022 போட்டியில் கலந்துகொள்ள அவர் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.