Advertisement

விராட் கோலியின் அதிரடிக்கு இதுவே காரணம் - ஸ்டீபன் ஃபிளமிங்!

நியூசிலாந்து அணி முன்னாள் வீரர், சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், கோலி மீண்டும் பார்முக்கு திரும்பியது எனதால் என்பது குறித்துப் பேசியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 26, 2022 • 13:10 PM
Stephen Fleming Reveals Secret Behind Virat Kohli’s Historic Knock Against Pakistan by Staff New
Stephen Fleming Reveals Secret Behind Virat Kohli’s Historic Knock Against Pakistan by Staff New (Image Source: Google)
Advertisement

டி20 உலகக் கோப்பை 2022 தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டி20 உலகக் கோப்பை தொடர் 2022 சூப்பர் 12 சுற்றின் 4ஆவது லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் முகமது ரிஸ்வான் 4,  பாபர் அசாம் 0 (1) ஆகியோர் சொதப்பிய நிலையில், அடுத்து ஷான் மசூத் 52, இஃப்திகார் அகமது 51 ஆகியோர் அபாரமாக விளையாடினார்கள். மற்ற பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்களை மட்டும் எடுத்த நிலையில், இறுதியில் ஷாஹீன் அஃப்ரீதி 16  ரன்களை சேர்த்து அசத்தினார். இதனால், பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 159/8 ரன்களை சேர்த்தது. அர்ஷ்தீப் சிங், ஹார்திக் பாண்டியா ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்கள்.

Trending


இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர்கள் ராகுல், ரோஹித் தலா 4 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்து சொதப்பினார்கள். அடுத்து சூர்யகுமார் 15, அக்சர் படேல் 2 ஆகியோரும் ஏமாற்றிய நிலையில் அடுத்து கோலி, ஹார்திக் பாண்டியா ஆகியோர் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
கடைசிக் கட்டம்:

இறுதியில், கடைசி ஓவரின் முதல் பந்தில் ஹார்திக் பாண்டியா 40 ஆட்டமிழந்தார். தொடர்ந்து தினேஷ் கார்த்திக் வந்ததால், இவர் ஆட்டத்தை முடித்துக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 5ஆவது பந்தில் 1 (2) ஆட்டமிழந்து இந்திய அணிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தினார். கடைசி பந்தில் 2 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை வந்தபோது, பௌலர் ஒயிட் வீசிய நிலையில், அடுத்த பந்தில் அஸ்வின் சிங்கில் எடுத்ததால், இந்திய அணி 20 ஓவர்களில் 160/6 ரன்களை சேர்த்து, 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.

கோலி 53 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 82 ரன்களை குவித்து, கடைசிவரை களத்தில் இருந்தார். கோலி சமீப காலமாகவே மீண்டும் முரட்டு பார்முக்கு திரும்பியிருப்பது இந்திய அணிக்கு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள நியூசிலாந்து அணி முன்னாள் வீரர், சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், கோலி மீண்டும் பார்முக்கு திரும்பியது எனதால் என்பது குறித்துப் பேசியுள்ளார்.

அதில், ‘‘விராட் கோலி இந்த வயதிலும் கம்பேக் கொடுத்ததற்கு, சிறப்பாக விளையாடுவதற்கு முக்கிய காரணம் அவரது பிட்னஸ்தான். பிட்னஸில் கோலி கூடுதல் கவனம் செலுத்தியதற்கு முக்கிய காரணம் தற்போது அனைவருக்கும் புரிந்திருக்கும். ஒவ்வொரு ரன்னிற்கும் அவர் ஓடும் பொழுது அவரது பிட்னஸ் எப்படி உள்ளது அனைவரும் தெரியும்.

ஹரிஸ் ரௌப்புக்கு எதிராக அவர் அடித்த இரண்டு ஷாட்கள் அதிர்ஷ்டத்தால் கிடைத்தது கிடையாது. தலைசிறந்த வீரர்களால்தான் அந்த நெருக்கடி, அழுத்தமான நேரத்திலும் அப்படி அதிரடியாக சிக்ஸர்களை அடிக்க முடியும்’’ எனக் தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement