சர்வதேச டெஸ்டில் 35ஆவது சதம்; கவாஸ்கர், லாராவை பின் தள்ளிய ஸ்டீவ் ஸ்மித்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 35 சதங்களை விளாசிய மூன்றாவது வீரர் எனும் பெருமையை ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் பெற்றுள்ளார்.
இலங்கை- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் உஸ்மான் கவாஜா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 92 ரன்கள்பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
அதன்பின் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து கவாஜாவுடன் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் தங்கள் சதங்களையும் பதிவுசெய்து அசத்தினர்.
Trending
இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 330 ரன்களைக் குவித்துள்ளது. இதில் உஸ்மான் கவாஜா 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 147 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 10 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 104 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணி தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா மற்றும் ஜெஃப்ரி வண்டர்சே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் இப்போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் சதமடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 35ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் 7ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேற்கொண்டு கிரிக்கெட் ஜாம்பவான்கள் சுனில் கவாஸ்கர், யுனிஸ் கான், பிரைன் லாரா, மஹிலா ஜெயவர்த்தே ஆகியோரை பின்னுக்கு தள்ளியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 51 சதங்களுடன் முதலிடத்திலும், தென் ஆக்கிரிக்காவின் ஜாக் காலிஸ் 45 சதங்களுடன் இரண்டாம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 41 சிக்ஸர்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இதுதவிர்த்து இலங்கையின் குமார் சங்கக்காரா (38), இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் இந்திய அணியின் ராகுல் டிராவிட் ஆகியோர் தலா 35 சதங்களுடன் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
இதுதவிர்த்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 35 சதங்களை விளாசிய மூன்றாவது வீரர் எனும் பெருமையையும் ஸ்டீவ் ஸ்மித் பெற்றுள்ளார். முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாமபவான் ரிக்கி பாண்டிங் 195 இன்னிங்ஸிலும், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 200 இன்னிங்களிலும் 35 சதங்களை எட்டிய நிலையில், ஸ்டீவ் ஸ்மித் 205 இன்னிங்ஸில் இந்த மைல் கல்லை எட்டியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now