
இந்தியாவுக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் நல்ல ஃபார்மில் உள்ளார். இத்தொடரில் அவர் முதல் நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஏழு இன்னிங்ஸ்களில் 39.57 என்ற சராசரியில் 277 ரன்களை எடுத்துள்ளார், அதில் அவர் 2 சதங்களையும் அடித்துள்ளார். இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான 5ஆவது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பு சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள்
இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் மேற்கொண்டு 38 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை நிறைவு செய்வார். அவர் இதுவரை 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 202 இன்னிங்ஸ்களில் 56.28 சராசரியில் 9962 ரன்கள் எடுத்துள்ளார். அதேசமயம் இதற்கு முன் ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிக்கி பாண்டிங் (13378 ரன்கள்), ஆலன் பார்டர் (11174 ரன்கள்), ஸ்டீவ் வாக் (10927) ஆகியோர் மட்டுமே 10ஆயிரம் ரன்களை எடுத்துள்ளனர்.