
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் கடந்தாண்டு முதல் எஸ்ஏ20 என்றழைக்கப்படும் டி20 தொடரை நடத்தி வருகிறது. தற்போதுவரை இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள எஸ்ஏ20 லீக் தொடரானது மூன்றாவது சீசனுக்காக தற்போதில் இருந்தே தயாராகி வருகிறது. அந்தவகையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் ஏலத்திற்கு முன்னரே வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் ஆர்வம் காட்டின.
அந்தவகையில் எதிர்வரவுள்ள மூன்றாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்காக விளையாட இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் ஆகியோரை ஏலத்திற்கு முன்னதாக அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது. முன்னதாக பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரில் ரைஸிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளர்.
மேலும் அவர் நடப்பு தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடி வந்த நிலையில் காயம் காரணமாக தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், டிரெண்ட் போல்ட் இதற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் பிரான்சைஸில் சார்பில் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், மேஜர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்காகவும், ஐஎல்டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார்.