
2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர்களுக்கான மினி ஏலத்தில் 16.25 கோடி ரூபாய்க்கு இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி . சிஎஸ்கே அணியால் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் அவர்தான்.உலகின் தலைசிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவரான ஸ்டோக்ஸ் வருங்கால சிஎஸ்கே அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படலாம் என ஒரு கருத்து நிலவி வருகிறது.
கடந்த் 2017 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார் பென் ஸ்ட்ரோக்ஸ் . இதுவரை 43 போட்டிகளில் விளையாடி 920 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் இரண்டு சதங்களும் இரண்டு அரை சதங்களும் அடங்கும். பந்துவீச்சின் மூலம் 28 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் 2021 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகளின் போது காயம் காரணமாக வெளியேறிய இவர் 2022 ஆம் ஆணடு ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை . இந்நிலையில் அவர் தற்போது சிஎஸ்கே அணிக்காக விளையாட இருக்கிறார். இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரும் சிஎஸ்கே அணியின் முன்னாள் துவக்க வீரர் மேத்யூ ஹைடன் பென் ஸ்டோக்ஸ் பற்றி சமீபத்திய பேட்டியில் தனது கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்.