ஐபிஎல் மட்டுமே விளையாடினால்போதும் டெஸ்ட் நன்றாக விளையாடுவார்கள் என அர்த்தமா?- சுனில் கவாஸ்கர் காட்டம்!
வெஸ்ட் இண்டீஸு அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் சர்ஃப்ராஸ் கான் தேர்வு செய்யப்படாதது குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்திய அணி வரும் ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று வெளியிட்டது.
இதில் அனுபவ வீரர்கள் புஜாரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகியோரு நீக்கப்பட்டு ஜெய்ஸ்வால், ருதுராஜ் மாற்றும் முகேஷ் குமார் ஆகியோருக்கு இடமலிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ரஞ்சு கோப்பை கிரிக்கெட் தொடரில் அபாரமாக செயல்பட்ட சர்ஃப்ராஸ் கான், அபிமன்யூ ஈஸ்வரன் போன்ற வீரர்களுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழக்கப்படவில்லை.
Trending
இந்நிலையில் முன்னாள் கேப்டனும் வீரருமான சுனில் கவாஸ்கர் கூறுகையில், “கடந்த 3 சீசன்களாக சராசரி 100க்கும் மேலாக விளையாடி வருகிறார் சர்ஃபராஸ் கான். இந்திய அணியில் தேர்வாக வேறென்ன செய்ய வேண்டும். 11 பேர் கொண்ட அணியில்கூட சர்ஃபராஸ் இடம் பெறவில்லை. அவரை அணியில் சேர்த்துக்கொண்டு அவரது ஆட்டம் கவனிக்கப்படுகிறது என்று சொல்லுங்கள் இல்லையெனில் ரஞ்சி விளையாடுவதை நிறுத்த சொல்லுங்கள். ஐபிஎல் மட்டுமே விளையாடினால்போதும் டெஸ்ட் நன்றாக விளையாடுவார்கள் என அர்த்தமா?” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சுப்மன் கில், ருதுராஜ் கைக்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்கிய ரஹானே, கேஎஸ் பரத், இஷான் கிஷன், ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துள் தாகூர், அக்சர் படேல், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெயதேவ் உனட்கட், நவ்தீப் சைனி
Win Big, Make Your Cricket Tales Now