
லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 283 ரன்கள் மற்றும் ஆஸ்திரேலியா 295 ரன்கள் எடுத்தன. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 395 ரன்கள் குவித்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் ஜோ ரூட் 91 ரன்கள், பேர்ஸ்டோ 78 ரன்கள், ஸாக் கிராவ்லி 73 ரன்கள், ஸ்டோக்ஸ் மற்றும் டக்கெட் தலா 42 ரன்கள் எடுத்தனர். 81.5 ஓவர்களில் 395 ரன்களை இங்கிலாந்து எடுத்தது. அதனால் 384 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியா விரட்டியது.
வார்னர் மற்றும் கவாஜா இணைந்து முதல் விக்கெட்டுக்கு 140 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். வார்னர் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். கவாஜா 72 ரன்கள் எடுத்து வெளியேறினார். லபுஷேன் 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஸ்மித் மற்றும் ஹெட் இணைந்து 95 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.