
எஸ்ஏ20 : சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்ட்ஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Google)
தென் ஆப்பிரிக்காவில் எஸ்ஏ20 கிரிக்கெட் லீக் தொடர் கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது. ஐபிஎல் பாணியில் நடத்தப்பட்ட இந்த தொடரின் முதலாவது சீசனில் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் 2ஆவது எஸ்ஏ 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை நடக்கிறது.
அதன்படி இன்று நடைபெறும் இத்தொடரின் முதலாவது போட்டியில் நடப்பு சாம்பியன் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை எதிர்த்து, ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கெபேர்ஹாவில் இன்று நடைபெறுகிறது. இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்
- இடம் - செயிண்ட் ஜார்ஜ் பார்க், கெபெர்ஹா
- நேரம் - இரவு 9 மணி (இந்திய நேரப்படி)