
Sunil Gavaskar bats for CSK superstar's return in playing XI against DC (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் செல்லப்பிள்ளைகளில் ஒருவர் சுரேஷ் ரெய்னா. ஐபிஎல் தொடங்கியதிலிருந்து சிஎஸ்கே அணிக்காக ஆடிவரும் ரெய்னா, பல அபாரமான மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை ஆடி சிஎஸ்கே அணிக்கு வெற்றிகளை குவித்து கொடுத்துள்ளார்.
பல இக்கட்டான நிலைகளில், சிஎஸ்கே அணியை தனி ஒருவனாக தலை நிமிர்த்தியவர் ரெய்னா. சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை வென்ற 3 சீசன்களிலும் ரெய்னாவின் பங்களிப்பு அதிகம்.
ஆனால் கடந்த சில சீசன்களாக அவர் சரியான ஃபார்ம் இல்லாம விளையாடமுடியாமல் திணறிவருகிறார். கடந்த சீசனில் ரெய்னா ஆடாத நிலையில், அந்த சீசனில் பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் முதல் முறையாக லீக் சுற்றுடன் வெளியேறியது சிஎஸ்கே அணி. இந்நிலையில், இந்த சீசனில் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த சீசனில் சரியாக ஆடமுடியாமல் கடுமையாக திணறிவருகிறார்.