-mdl.jpg)
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது நெருங்கிவரும் சூழலில் இத்தொடரின் மீதானா எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதன்படி வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், இதில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும், அதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
இதன்காரணமாக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்தவகையில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கும் இங்கிலாந்து அணியும் இத்தொடருக்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதேசமயம் இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்கள் அனைவரும் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகி தயாகம் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் தொடரின் பாதியிலேயே விலகும் வீரர்கள் மீது பிசிசிஐ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.