
Sunil Gavaskar Names Greatest All-rounder Ever (Image Source: Google)
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் சுனில் கவாஸ்கர். சர்வதேச டெஸ்ட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றவர்.
இந்நிலையில் கவாஸ்கர், தான் பார்த்ததிலேயே சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் கார்பீல்டு சோபர்ஸ் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர்‘‘நான் பார்த்ததிலேயே சிறந்த ஆல்-ரவுண்டர் சர் கார்பீல்டு சோபர்ஸ்தான். ஏனென்றால் மிகவும் எளிமையான பேட்டிங் மற்றும் பந்து வீச்சால் போட்டியின் தன்மையை மாற்றக் கூடியவர். நம்பமுடியாத வகையிலான கேட்ச்களை பிடித்தும் ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடியவர். ஏராளான போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சால் போட்டியின் தன்மையை மாற்றியுள்ளார். அதனால் நான் பார்த்ததில் சிறந்த ஆல்-ரவுண்டர் இவர்தான்.