
டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறிவிடும் என்று பல முன்னாள் வீரர்களால் உறுதியாக நம்பப்பட்ட பாகிஸ்தான் அணி இப்போதைக்கு அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்திருக்கிறது.
குரூப் 2இல் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் அணி சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் இந்தியாவிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதன்பின்னர் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் வெறும் 131 ரன்கள் என்ற இலக்கை அடிக்க முடியாமல் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது பாகிஸ்தான்.
முதல் 2 போட்டிகளிலும் தோற்ற பாகிஸ்தான் அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பாகிஸ்தான் இடம்பெற்றுள்ள குரூப் 2இல் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் அபாரமாக விளையாடி வெற்றிகளை பெற்றுவருவதால் பாகிஸ்தான் அணி இனி அரையிறுதிக்கு முன்னேறுவது மிகக்கடினம். வாய்ப்பே இல்லை என்று கூட சொல்லலாம்.