Advertisement

தோனி பினிஷிங் செய்து கொடுத்திருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும் - சுனில் கவாஸ்கர்!

ஐபிஎல் இறுதிப்போட்டியில் தோனி பினிஷிங் செய்து கொடுத்திருந்தால், இங்கு முற்றிலும் சிறப்பாக அமைந்திருக்கும். இருப்பினும் அணியின் வெற்றி முக்கியம் என சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

Advertisement
Sunil Gavaskar Reacts To CSK Captain's Golden Duck In IPL 2023 Final!
Sunil Gavaskar Reacts To CSK Captain's Golden Duck In IPL 2023 Final! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 30, 2023 • 10:53 PM

அகமதாபாத்தில் 28ஆம் தேதி நடைபெறவிருந்த நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மழை காரணமாக நடக்குமா? இல்லையா? போட்டி எப்படி முடியும்? என்கிற பல்வேறு குழப்பங்களுடன் நீடித்தது. அதன்பின் 29ஆம் தேதி ரிசர்வ் நாள் அன்று, முதல் இன்னிங்ஸ் நன்றாக நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபாரமாக பேட்டிங் செய்து 214 ரன்கள் குவித்தது. இந்த இலக்கை சேஸ் செய்வதற்கு சிஎஸ்கே அணி களமிறங்கியபோது, திடீரென மழை குறுக்கிட்டதால் போட்டி மீண்டும் தடைப்பட்டது. நீண்ட நேரம் மழை பெய்து கொண்டே இருந்ததால் போட்டி துவங்குவதற்கு தாமதமானது.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 30, 2023 • 10:53 PM

கடைசியாக 11.45 மணியளவில் நடுவர்களிடம் இருந்து வெளிவந்த அறிவிப்பின்படி, போட்டி 15 ஓவராக குறைக்கப்பட்டது. 12.10 மணியளவில் போட்டி துவங்கியது. டக்வோர்த்-லூயிஸ் முறைப்படி, 5 ஓவர்களில் சிஎஸ்கே அணிக்கு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சிஎஸ்கே அணிக்கு ருத்துராஜ் மற்றும் கான்வெ இருவரும் ஓப்பனிங்கில் சிறப்பான துவக்கம் அமைத்துக் கொடுத்தனர். இது திருப்புமுனையாக இருந்தது. அடுத்து வந்த ரகானே விரைவாக 27 ரன்கள் அடித்துக்கொடுத்து ஆட்டமிழந்தார். ராயுடு 8 பந்துகளில் 19 ரன்கள் அடித்து வெளியேறினார்.

Trending

சிவம் துபே கடைசி வரை உள்ளே நிற்க, ராயுடு ஆட்டமிழந்த பிறகு, உள்ளே வந்த முதல் பந்திலேயை தோனி ஆட்டம் இழந்தது பேரதிர்ச்சியை கொடுத்தது. இருப்பினும் அடுத்து உள்ளே வந்த ஜடேஜா நிதானமாக நின்று, கடைசி இரண்டு பந்துகளில் 6 மற்றும் 4 அடித்து சிறப்பாக பினிஷ் செய்து கொடுத்தார். சிஎஸ்கே அணி ஐந்தாவது முறையாக கோப்பையை தட்டி சென்றது. பலரும் எதிர்பார்த்த சிஎஸ்கே அணி அபாரமாக பினிஷ் செய்து கோப்பையை கைப்பற்றியது. ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றி மும்பை இந்தியன்ஸ் சாதனையை சமன் செய்தது. இறுதிப்போட்டியில் பல்வேறு திருப்புமுனைகள் நிகழ்ந்திருந்தாலும், இதில் தோனி பினிஷிங் செய்து கொடுப்பதை நான் மிஸ் செய்தேன் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “தோனி கடைசி வரை நின்று போட்டியை ஃபினிஷ் செய்து கொடுத்திருந்தால் இது முற்றிலும் மாறுபட்ட போட்டியாக இருந்திருக்கும். பல உணர்வுகளை கொடுத்திருக்கும். இதை நான் மிகவும் மிஸ் செய்தேன். மற்றபடி சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. தொடர் முழுவதும் அபாரமாக செயல்பட்டார்கள்.

தோனி எப்போதும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கொண்டவர் அல்ல. அவர் ஒரு டீம் வீரர். ஆகையால் அவர் ரன் அடிக்கவில்லை என்றாலும், அணியை வழிநடத்திய விதம் இறுதியில் கோப்பையை பெற வைத்திருக்கிறது. நீங்கள் நூறு ரன்கள் அல்லது ஐந்து விக்கெட்டுகள் எடுத்திருந்தாலும் உங்களது அணி வெற்றி பெறவில்லை என்றால் அதில் ஒரு பயனும் இல்லை. வெற்றிபெற்ற அணியாக முடிப்பது முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement