
இம்மாதம் இறுதியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் பேக்கப் வீரராக 18ஆவது நபராக சஞ்சு சாம்சன் இணைத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறார்.
இந்திய மண்ணில் உலகக் கோப்பை நடைபெற இருக்கின்ற நிலையில், சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான தன்மைகள் இருக்கும். இப்படி இருக்கும் பொழுது அணியின் பிரதான சுழற் பந்துவீச்சாளர் சாகல் அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார். மேலும் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் இடது கை சுழற் பந்துவீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா அக்சர் படேல் என இரண்டு பேர் தொடர்கிறார்கள். இது தற்பொழுது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
ஒரே அணியில் இரண்டு இடது கை சுழற் பந்துவீச்சாளர்கள் தேவையா? அந்த இடத்தில் பேட்டிங் செய்யக்கூடிய ரவிச்சந்திரன் அஸ்வின் இல்லை வாஷிங்டன் சுந்தர் இருவரில் யாரையாவது தேர்வு செய்து இருக்க வேண்டும் என்கின்ற கருத்துகள் சமூக வலைதளத்தில் ரசிகர்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது.