Advertisement

SA20 League: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் vs பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!

எஸ் ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, வெய்ன் பார்னெல் தலைமையிலான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

Advertisement
Sunrisers Eastern Cape vs Pretoria Capitals, SA20 3rd Match – EAC vs PRE Cricket Match Preview, Pred
Sunrisers Eastern Cape vs Pretoria Capitals, SA20 3rd Match – EAC vs PRE Cricket Match Preview, Pred (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 12, 2023 • 02:20 PM

தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள எஸ் ஏ20 லீக் டி20 கிரிக்கெட் தொடர் ரசிகர்களின் வரவேற்பினைப் பெற்றுள்ளது. இதில் இன்று நடைபெறும் 3ஆவது லீக் ஆட்டத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, வெய்ன் பார்னெல் தலைமையிலான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
January 12, 2023 • 02:20 PM

போட்டி தகவல்கள்

Trending

  • மோதும் அணிகள் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் vs பிரிட்டோரியா கேப்பிடல்ஸ்
  • இடம் - செயிண்ட் ஜார்ஜ் பார்க்,க்கெபெர்ஹா
  • நேரம் - இரவு 9 மணி (இந்திய நேரப்படி)

போட்டி முன்னோட்டம்

ஐடன் மார்கம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ஆடம் ரோஸிங்டன், ஜேஜே ஸ்மட்ஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஜோர்டன் ஹெர்மன் என அதிரடி வீரர்களைக் கொண்டுள்ளது. இதில் கேப்டன் ஐடன் மார்க்ரம் ஐபிஎல், டி20 உலகக்கோப்பை என அடுத்தடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஃபார்மில் உள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.

பந்துவீச்சில் மார்கோ ஜான்சென், சிசண்டா மாகலா, மசென் கிரேன் ஆகியோர் இருப்பதால் நிச்சயம் எதிரணி வீரர்களுக்கு இவர்கள் தலைவலியை ஏற்படுத்துவர் என கணிக்கப்படுகிறது. 

அதேசமயம் வெய்ன் பார்னெல் தலைமையிலான பிரிடோரியா கேப்பிட்டல்ஸ் அணியின் பேட்டிங்கில் பிலிப் சால்ட், வில் ஜேக்ஸ், ரைலி ரூஸோவ், ஜிம்மி நீஷன் என டி20 நட்சத்திரங்களைக் கொண்டுள்ளதால் இவர்களை அவ்வளவு எளிதாக எடுத்தக்கொள்ள முடியாது. 

பந்துவீச்சில் பார்னெல், நீஷம், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, ஆதில் ரஷித், ஜோஷுவா லிட்டில் என நட்சத்திர பட்டாளத்தைக் கொண்டிருப்பது அணிக்கும் பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு குறை இருக்காது என கணிக்கப்படுகிறது.

உத்தேச லெவன்

சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - ஜோர்டான் ஹெர்மன், ஆடம் ரோஸீங்டன், ஜேஜே ஸ்மட்ஸ், ஐடன் மார்க்ரம் (கே), டாம் ஆபெல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரோலோஃப் வான் டெர் மெர்வே, மார்கோ ஜான்சன், பிரைடன் கார்ஸ், சிசண்டா மாகலா, மேசன் கிரேன்.

பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - பில் சால்ட், வில் ஜாக்ஸ், ரிலீ ரூஸோவ், தியூனிஸ் டி ப்ரூயின், மார்கோ மரைஸ், ஜேம்ஸ் நீஷாம், வெய்ன் பார்னெல் (கே), மைக்கேல் பிரிட்டோரியஸ், அன்ரிச் நோர்ட்ஜே, ஆதில் ரஷித், ஜோஷுவா லிட்டில்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - ஆடம் ரோஸிங்டன், பில் சால்ட்
  • பேட்டர்ஸ் - ஐடன் மார்க்ரம், ரிலீ ரூஸொவ், வில் ஜாக்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - வெய்ன் பார்னெல், மார்கோ ஜான்சன், ஜேஜே ஸ்மட்ஸ்
  • பந்துவீச்சாளர்கள் - அன்ரிச் நோர்ட்ஜே, ஆதில் ரஷித், மேசன் கிரேன்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement