Advertisement
Advertisement
Advertisement

சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் vs பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

எஸ் ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 6ஆவது லீக் ஆட்டத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, வெய்ன் பார்னெல் தலைமையிலான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan January 14, 2023 • 13:44 PM
Sunrisers Eastern Cape vs Pretoria Capitals, SA20 6th Match – EAC vs PRE Cricket Match Preview, Pred
Sunrisers Eastern Cape vs Pretoria Capitals, SA20 6th Match – EAC vs PRE Cricket Match Preview, Pred (Image Source: Google)
Advertisement

தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள எஸ் ஏ20 லீக் டி20 கிரிக்கெட் தொடர் ரசிகர்களின் வரவேற்பினைப் பெற்றுள்ளது. இதில் இன்று நடைபெறும் 6ஆவது லீக் ஆட்டத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, வெய்ன் பார்னெல் தலைமையிலான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

ஏற்கெனவே இவ்விரு அணிகளும் மோதிய லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனால் கடந்த போட்டில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சன்ரைசர்ஸ் அணி செயல்படும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.

Trending


போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் vs பிரிட்டோரியா கேப்பிடல்ஸ்
  • இடம் - செண்ட்சூரியன்
  • நேரம் - இரவு 5 மணி (இந்திய நேரப்படி)

போட்டி முன்னோட்டம்

ஐடன் மார்கம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ஆடம் ரோஸிங்டன், ஜேஜே ஸ்மட்ஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஜோர்டன் ஹெர்மன் என அதிரடி வீரர்களைக் கொண்டுள்ளது. இதில் கேப்டன் ஐடன் மார்க்ரம் ஐபிஎல், டி20 உலகக்கோப்பை என அடுத்தடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஃபார்மில் உள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.

பந்துவீச்சில் மார்கோ ஜான்சென், சிசண்டா மாகலா, மசென் கிரேன் ஆகியோர் இருப்பதால் நிச்சயம் எதிரணி வீரர்களுக்கு இவர்கள் தலைவலியை ஏற்படுத்துவர் என கணிக்கப்படுகிறது. 

அதேசமயம் வெய்ன் பார்னெல் தலைமையிலான பிரிடோரியா கேப்பிட்டல்ஸ் அணியின் பேட்டிங்கில் பிலிப் சால்ட், வில் ஜேக்ஸ், ரைலி ரூஸோவ், ஜிம்மி நீஷன் என டி20 நட்சத்திரங்களைக் கொண்டுள்ளதால் இவர்களை அவ்வளவு எளிதாக எடுத்தக்கொள்ள முடியாது. 

பந்துவீச்சில் பார்னெல், நீஷம், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, ஆதில் ரஷித், ஜோஷுவா லிட்டில் என நட்சத்திர பட்டாளத்தைக் கொண்டிருப்பது அணிக்கும் பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு குறை இருக்காது என கணிக்கப்படுகிறது.

உத்தேச லெவன்

சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்: ஜேஜே ஸ்மட்ஸ், சரேல் எர்வீ, ஜோர்டான் காக்ஸ், ஐடன் மார்க்ரம்(கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டாம் ஆபெல், மார்கோ ஜான்சன், ஜேம்ஸ் புல்லர், சிசாண்டா மாகலா, மேசன் கிரேன், ஒட்னியல் பார்ட்மேன்.

பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்: பிலிப் சால்ட், வில் ஜாக்ஸ், ரைலி ரூஸோவ், தியூனிஸ் டி புரூயின், ஷேன் டாட்ஸ்வெல், ஜேம்ஸ் நீஷம், செனுரன் முத்துசாமி, வெய்ன் பார்னல்(கே), ஈதன் போஷ், ஆதில் ரஷித், அன்ரிச் நோர்ட்ஜே

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - டிரிஸ்டன் ஸ்டப்ஸ், பில் சால்ட்
  • பேட்டர்ஸ் - ஐடன் மார்க்ரம், ரிலீ ரூஸொவ், வில் ஜாக்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - வெய்ன் பார்னெல், மார்கோ ஜான்சன், ஜேஜே ஸ்மட்ஸ்
  • பந்துவீச்சாளர்கள் - அன்ரிச் நோர்ட்ஜே, ஆதில் ரஷித், மேசன் கிரேன்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement