Advertisement

ஐபிஎல் 2021: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 37ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Advertisement
Sunrisers Hyderabad v Punjab Kings, 37th IPL Match – Cricket Match Prediction, Fantasy XI Tips & Pro
Sunrisers Hyderabad v Punjab Kings, 37th IPL Match – Cricket Match Prediction, Fantasy XI Tips & Pro (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 24, 2021 • 10:43 PM

ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 37ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 24, 2021 • 10:43 PM

அமீரகத்தில் நடைபெற்ற லீக் ஆட்டங்களில் இரு அணிகளும் தோல்வியைத் தழுவியுள்ளதால் இப்போட்டியில் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Trending

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் 
  • நேரம் - 7.30 மணி
  • இடம் - சார்ஜா கிரிக்கெட் மைதானம், ஷார்ஜா

போட்டி முன்னோட்டம்

கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடனான போட்டியில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இத்தோல்வியின் மூலம் ஹைதராபாத் அணி 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான முந்தைய போட்டியில் 2 ரன்களில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. மேலும் இனிவரும் போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்யும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

நேருக்கு நேர்

  • மோதிய ஆட்டங்கள் - 17
  • ஹைத்ராபாத் வெற்றி - 12
  • பஞ்சாப் வெற்றி - 05

உத்தேச அணி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டேவிட் வார்னர், விருத்திமான் சாஹா, மணீஷ் பாண்டே, கேன் வில்லியம்சன் (கே), கேதர் ஜாதவ், ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத், ரஷித் கான், புவனேஸ்வர் குமார், சந்தீப் சர்மா, கலீல் அகமது.

பஞ்சாப் கிங்ஸ் - கேஎல் ராகுல் (கே), மயங்க் அகர்வால், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஃபாபியன் ஆலன், அதில் ரஷித், ஹர்பிரீத் பிரார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், இஷான் போரல்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

பேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர் - கேஎல் ராகுல், விருத்திமான் சாஹா
  • பேட்டர்ஸ் - ஐடன் மார்க்ராம், மயங்க் அகர்வால், அப்துல் சமத், கேன் வில்லியம்சன்
  • ஆல் -ரவுண்டர்கள் - ஃபாபியன் ஆலன்
  • பந்துவீச்சாளர்கள் - கலீல் அகமது, ரஷித் கான், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement