
Suresh Raina Confirms His Visiting To Uae For Ipl 2021 (Image Source: Google)
கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருந்த ஐபிஎல் தொடரின் 13வது சீசன், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இத்தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்திய மும்பை அணி 5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
மேலும் சிஎஸ்கே அணி முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் லீக் ஆட்டத்தில் வெளியேறியது. இதற்கு முக்கிய காரணம், தனிப்பட்ட காரணங்களுக்காக சிஎஸ்கே அணியின் துணைக் கேப்டன் சுரேஷ் ரெய்னா தொடரிலிருந்து விலகியதும் ஒன்று.
இருப்பினும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மீண்டும் சென்னை அணிக்காக களமிறங்கி விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டு தற்போது மீண்டும் எஞ்சியுள்ள ஐபிஎல் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவதால் சுரேஷ் ரெய்னா இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.