
Suresh Raina Lost The Loyalty Of MS Dhoni: Simon Doull (Image Source: Google)
ஐபிஎல் மெகா ஏலத்தில் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா விலைப் போகவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அவரை ஏலம் கேட்கவில்லை. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களும், ரெய்னாவின் ரசிகர்களும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த நிலையில் ரெய்னாவை அணியில் எடுக்காததற்கு காரணத்தை நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைமன் டுல் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ரெய்னா ஒரு சிறந்த வீரராக இருக்கலாம். ஆனால் தோனியின் நம்பிக்கையை அவர் இழந்துவிட்டார். 2020ஆம் ஆண்டு அணியிலிருந்து அவர் பாதியிலிருந்து விலகினார். இதனால் அவர் மீதான நம்பிக்கை தோனிக்கும், அணி நிர்வாகத்துக்கும் போய்விட்டது.