
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக இத்தொடரில் எஞ்சியிருந்த போட்டிகளை ஒருவாரம் ஒத்திவைப்பதாக பிசிசிஐ தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பானது நேற்று வெளியானது.
இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளை அடுத்த வாரம் முதல் தொடகும் வேலைகளில் பிசிசிஐ இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் வீரர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் போட்டிகளை தென் இந்தியாவில் மட்டும் நடத்தலாம் என்று பிசிசிஐ ஆலோசித்து வருவதாகவும், எஞ்சிய போட்டிகளுக்கான மறு அட்டவணையை பிசிசிஐ கூடிய விரைவில் அறிவிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா பாட் காஸ்ட் நிகழ்ச்சில் ஒன்றில் பங்கேற்ற போது, அதில் அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையே ஒரு அணியைத் தேர்ந்தெடுத்து, மீண்டும் ஐபிஎல் விளையாட வாய்ப்பு கிடைத்தால் எந்த அணியில் சேர விரும்புகிறேன் என்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். மேலும் அவரின் பதிலைக் கேட்ட பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.