அடுத்த ஐபிஎல் சீசனிலும் தோனி விளையாடுவார் - சுரேஷ் ரெய்னா நம்பிக்கை!
மகேந்திர சிங் தோனி நிச்சயம் அடுத்த ஐபிஎல் தொடரிலும் விளையாடுவார் என முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும், எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
ஆனால் இத்தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடுகள் ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் நடப்பு ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது அடுத்தடுத்து தொடர்ச்சியாக 5 தோல்விகளைச் சந்தித்தது. மேற்கொண்டு இத்தொடரில் இதுவரை சிஎஸ்கே அணி 9 போட்டிகளில் 7 தோல்விகளைச் சந்தித்துள்ளது.
Also Read
இதன் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதுடன், பிளே ஆஃப் வாய்ப்பையும் இழந்துள்ளது. இதன் காரணமாக அணி தேர்வு, அணியை வழிநடத்திய வீதம், பயிற்சியாளர்கள், வீரர்கள் என அனைவரது மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மேற்கொண்டு தொடரின் பாதியில் கேப்டன்சியை ஏற்ற எம் எஸ் தோனியின் மீதும் சிலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
மேலும் இது தோனியின் கடைசி ஐபிஎல் சீசனாகவும் இருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. தற்போது 43 வயதாகும் மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் கொடுக்கவில்லை என்பதால், அவரின் ஓய்வு குறித்த குழப்பங்களும் அதிகரித்துள்ளன. இந்நிலையில், மகேந்திர சிங் தோனி நிச்சயம் அடுத்த ஐபிஎல் தொடரிலும் விளையாடுவார் என முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
#IPL2025 #MSDhoni #SureshRaina #CSK pic.twitter.com/PxEtmZdZVZ
— CRICKETNMORE (@cricketnmore) April 27, 2025Also Read: LIVE Cricket Score
இதுகுறித்து பேசிய ரெய்னா, “எம் எஸ் தோனி இன்னும் ஒரு வருடம் ஐபிஎல் சீசனில் விளையாடப் போகிறார், நான் உறுதியாக நம்புகிறேன்' என்று கூறியுள்ளார். சுரேஷ் ரெய்னாவின் இந்த கணிப்பு சரியாக இருந்தால், தோனி தனது 44 வயதில் இந்த தொடரில் விளையாடுவார். இப்போதைக்கு, தோனியின் உடற்தகுதி முன்பு போல் இல்லை என்பதால், அவர் அடுத்த சீசனில் விளையாடுவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Win Big, Make Your Cricket Tales Now