
நடப்பண்டிற்கான ஐபிஎல் திருவிழா ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது.
இந்நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் காயம் காரணமாக
தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இதனால் ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாட மாட்டார் என்றே
தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் பதவி
ரிஷப் பந்துக்கு கிடைத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் அணியின்
முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, ரிஷப் பந்துக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகளை
தெரிவித்துக்கொள்கிறேன். நான் உறுதியாக சொல்கிறேன் டெல்லி அணி வெற்றி நடைபோடும்,
ரிஷப் பந்தும் சிறந்த கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ரிஷப் பந்த், நான் வளர்ந்த இடம் டெல்லி, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எனது
ஐபிஎல் பயணம் தொடங்கியது. இந்த அணியை ஒரு நாள் வழிநடத்த வேண்டும் என்பது என்
கனவு. இன்று, அந்த கனவு நனவாகும்போது, நான் தாழ்மையுடன் உணர்கிறேன்.