கனவு லெஜண்ட்ஸ் அணியை அறிவித்த சுரேஷ் ரெய்னா; தோனி, கோலிக்கு இடமில்லை!
தனது கனவு லெஜண்ட்ஸ் அணியை தேர்வு செய்துள்ள சுரேஷ் ரெய்னா, இந்த அணியில் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இடம் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Suresh Raina's World XI: உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரின் போது முன்னாள் இந்திய நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா தனது கனவு அணியைத் தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளார்.
உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரின் நடப்பு சீசன் நேற்று முதல் கோலாகலாம தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்தியா சாம்பியன்ஸ் அணியில் இடம்ம்பிடித்துள்ள முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது கனவு அணியைத் தேர்வு செய்துள்ளார். இவர் தேர்வு செய்திருக்கும் இந்த அணியில் இந்திய அணியின் ஜாம்பவான்கள் எம் எஸ் தோனி, விராஅட் கோலி உள்ளிட்டோருக்கு இடம் கொடுக்காதது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சுரேஷ் ரெய்னா தேர்ந்தெடுத்துள்ள இந்த அணியில் தொடக்க வீரர்களாக வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர் ஆகோரைத் தேர்வு செய்துள்ளார். அவர்களைத் தொடர்ந்து அணியின் மிடில் ஆர்டர் வீரர்களாக வெஸ்ட் இண்டீஸீன் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் கேரி சோபர்ஸ் ஆகியோரையும், இந்தியாவின் யுவராஜ் சிங்கிற்கு இடம் கொடுத்துள்ளார்.
மேற்கொண்டு அணியின் ஆல் ரவுண்டர்களாக இங்கிலாந்தின் இயான் போத்தம் மற்றும் ஆண்ட்ரூ பிளின்டாஃபிற்கு இடாம் கொடுத்துள்ளார். அதேசமயம் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களாக ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னேவையும், இந்திய அணியின் ஆனில் கும்ப்ளே, ஹர்பஜ் சிங் மற்றும் பாகிஸ்தான்
அணியின் சமநிலையை பராமரிக்க, இரண்டு இங்கிலாந்து ஆல்ரவுண்டர்கள் இயன் போத்தம் மற்றும் ஆண்ட்ரூ பிளின்டாஃப் ஆகியோருக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. பந்துவீச்சுத் துறையில், ஆஸ்திரேலியாவின் மறைந்த லெக்-ஸ்பின்னர் ஷேன் வார்ன், இந்தியாவின் அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் மற்றும் பாகிஸ்தானின் சக்லைன் முஷ்டாக் ஆகியோரையும் சுரேஷ் ரெய்னா தனது அணியில் சேர்த்துள்ளார்.
மேற்கொண்டு இந்த அணியில் இம்பேக்ட் வீரராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பால் ஆடம்ஸிற்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். இருப்பினும், அவர் தேர்வு செய்துள்ள இந்த கனவு அணியில் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரின் பெயர்களை குறிப்பிடவில்லை. ஒருபக்கம், ரெய்னாவின் அணி மிகவும் வலுவாகத் தோன்றினாலும், தோனி மற்றும் விராட் கோலி போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காதது ரசிகர்களை ஆதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Also Read: LIVE Cricket Score
சுரேஷ் ரெய்னா தேர்வு செய்த உலக லெவன்: பிரையன் லாரா, சச்சின் டெண்டுல்கர், விவியன் ரிச்சர்ட்ஸ், கேரி சோபர்ஸ், யுவராஜ் சிங், இயன் போத்தம், ஆண்ட்ரூ பிளின்டாஃப், ஷேன் வார்ன், ஹர்பஜன் சிங், அனில் கும்ப்ளே, சக்லைன் முஷ்டாக், பால் ஆடம்ஸ் (இம்பேக்ட்வீரர்)
Win Big, Make Your Cricket Tales Now