
இலங்கையில் நடைபெற இருக்கும் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வருகின்ற ஜூன் மாதம் 30 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது . இந்தப் போட்டியில் பங்கேற்பதற்கான வீரர்களுக்கான ஏலம் வருகின்ற ஜூன் 14ஆம் தேதி நடைபெற உள்ளது .
இந்த தொடரிலும் பிற நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் லீக் போட்டிகளைப் போலவே சர்வதேச வீரர்கள் ஏலம் முறையில் கலந்து கொள்கின்றனர் . இந்த வருடம் நடைபெற இருக்கும் ஏலத்தில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் குட்டி தல என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா கலந்துகொள்ள இருக்கிறார் .
இதற்காக அவர் தனது பெயரையும் பதிவு பதிவு செய்துள்ளார் . தன்னுடைய அடிப்படை விலையாக 50,000 அமெரிக்க டாலராக நிர்ணயம் செய்திருக்கிறார் சுரேஷ் ரெய்னா . லங்கா பிரீமியர் லீக் போட்டிகளில் இதற்கு முன்பு இந்தியாவில் இருந்து முன்னாள் ஆல் ரவுண்டர் இர்ஃபான் பதான் 2020 ஆம் ஆண்டு விளையாடிவுள்ளார்.