
Suresh Raina wants either Suriya or Dulquer to star as the lead in his biopic (Image Source: Google)
இந்திய சினிமாவில் மேரி கோம், தோனி, சாய்னா நேவால், மில்கா சிங் என விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. இதனால் பல இயக்குநர்கள் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படத்தை இயக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் 'மிஸ்டர் ஐபிஎல்' சுரேஷ் ரெய்னா நேற்று சிஎஸ்கே அணியுடனான இன்ஸ்டாகிராம் நேரலை நேர்காணலில் கலந்துரையாடினார். இதை சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக விளையாட்டு நிகழ்ச்சி தொகுப்பாளினி பாவனா தொகுத்து வழங்கினார்.
இந்த கலந்துரையாடலின் போது பாவனா, ரெய்னாவிடம் உங்களுடைய பயோபிக் எடுக்கப்பட்டால் அதில் யார் நடிக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள் என கேள்வியெழுப்பினார்.