
Suresh Raina Wants RCB to Win IPL 2022 For Virat Kohli (Image Source: Google)
ஐபிஎல்லில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறையும், தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 4 முறையும் கோப்பையை வென்றுள்ளன. இந்த அணிகள் எல்லாம் ஐபிஎல்லில் டைட்டில் வெல்வதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில், ஆர்சிபி அணிக்கு மட்டும் அது கைகூடவே இல்லை.
விராட் கோலி - டிவில்லியர்ஸ் என்ற இருபெரும் ஜாம்பவான்கள் அணியில் இருந்தும் ஆர்சிபியால் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியாதது துரதிர்ஷ்டவசமானது.
ஐபிஎல் தொடங்கியதிலிருந்து இப்போது வரை ஆர்சிபி அணிக்காக மட்டுமே ஆடிவரும் விராட் கோலி 221 போட்டிகளில் ஆடி 6592 ரன்களை குவித்துள்ளார். அவர் 10 ஆண்டுகள் ஆர்சிபியை வழிநடத்தியும், அதில் ஒரு சீசனில் கூட ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல முடியாதது அவரது ஐபிஎல் கெரியரில் ஒரு கரும்புள்ளி தான்.