
லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் போட்டியில் சமீபத்தில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் குட்டி தல என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா இந்திய மகாராஜா அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று உலக ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் சிறப்பாக விளையாடின 49 ரன்கள் எடுத்தார்.
போட்டிக்கு பின் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய ரெய்னா அவர்களின் பல்வேறு விதமான கேள்விகளுக்கும் பதில் அளித்தார். ஐபிஎல் தொடர்பான கேள்விகளுக்கு உற்சாகமுடன் பதிலளித்த ரெய்னா இந்த முறை சென்னை திரும்பி இருக்கும் சிஎஸ்கே அணி நிச்சயமாக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் இந்த போட்டியின் போது செய்தியாளர் ஒருவர் சுரேஷ் ரெய்னாவிடம், நீங்கள் நன்றாக ஆடுகிறீர்கள் திரும்ப ஏன் ஐபிஎல் போட்டிகளில் நீங்கள் விளையாட கூடாது? என கேள்வி எழுப்பினார். இதற்கு நகைச்சுவையுடன் பதிலளித்த சுரேஷ் ரெய்னா, “நான் ஷாஹித் அஃப்ரிடி இல்லை. தான் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டேன். இனி திரும்ப விளையாட மாட்டேன்” என நகைச்சுவையுடன் பதிலளித்தார். ஷாஹுத் அஃப்ரிடி பலமுறை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டேன் என அறிவித்துவிட்டு பின்னர் மீண்டும் விளையாட வந்ததை அவர் சுட்டிக்காட்டி நகைச்சுவையுடன் பதில் அளித்தார்.