பயிற்சி ஆட்டம்: சூர்யா, அர்ஷ்தீப் அபாரம்; இந்திய அணி த்ரில் வெற்றி!
மேற்கு ஆஸ்திரேலிய அணிக்கெதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. பிரதான சுற்று போட்டி அக்டோபர் 23ஆம் தேதிதான் தொடங்கும் என்பதால், இந்திய அணி தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக இந்திய அணி, மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பயிற்சி டி20 போட்டியில் விளையாடினார்கள். கோலி, கேஎல் ராகுல், அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணியில் வீரர்களாக ரோஹித் சர்மாவுடன், ரிஷப் பந்த் இருந்தார்.
Trending
மேற்கு ஆஸ்திரேலிய அணியில் ஜேசன் பெக்ரென்டர்ப், ஆண்ட்ரூ டை, மேத்யூ ஹெல்லி போன்ற அதிவேக வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்ததால், இப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. வேகத்திற்கு சாதகமான அந்த பிட்சில் ரோஹித் ஷர்மா 3 ரன்களும், ரிஷப் பந்த் 9 ரன்களும் எடுத்து நடையைக் கட்டினார்கள்.
அடுத்து தீபக் ஹூடா அபாரமாக விளையாடி 14 பந்துகளில் 22 ரன்களை சேர்த்ததால், இந்திய அணி பவர் பிளேவில் 39 ரன்களை எடுத்தது. இதனைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்கள். சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் தலா மூன்று பவுண்டரி, சிக்ஸர்களை பறக்கவிட்டு 52 ரன்களை குவித்து நடையைக் கட்டினார்கள். ஹார்திக் பாண்டியா 29 பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை.
இறுதியில் கடைசி இரண்டு ஓவர்களின்போது தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் படேல் ஆகியோர் களத்தில் இருந்தார்கள். அப்போது தினேஷ் கார்த்திக் வழக்கமான அதிரடியை வெளிப்படுத்தி 19 ரன்களை சேர்த்த நிலையில் ஹர்ஷல் 6 ரன்களை எடுத்தார். இதனால், இந்திய அணி 20 ஓவர்களில் 158/6 ரன்களை சேர்த்தது.
இதையடுத்து இலக்கை துரத்திக் களமிறங்கிய மேற்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பவர் பிளேவில் அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார் ஆகியோர் அபாரமாக பந்துவீசி தலா இரண்டு விக்கெட்களை சாய்த்தார்கள். இதனால், மேற்கு ஆஸ்திரேலிய அணி பவர் பிளேவில் 29/4 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் சாம் பனிங் மட்டுமே சிறப்பாக விளையாடி 59 ரன்களை சேர்த்தார்.
மேற்கு ஆஸ்திரேலிய அணி 16 ஓவர்களில் 113/5 ரன்கள் சேர்த்திருந்தபோது, கடைசி 4 ஓவர்களில் 46 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, இந்திய டெத் பௌலிங் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டது. புவி, அர்ஷ்தீங் சிங், ஹர்ஷல் படேல் ஆகியோர் மிரட்டலாக பந்துவீசி 4 ஓவர்களில் 32 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தனர்.
இதனால், மேற்கு ஆஸ்திரேலிய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சஹால் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now