Advertisement

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மகுடம் சூடிய சூர்யகுமார் யாதவ்!

ஒரு ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் எனும் சாதனையை சூர்யகுமார் யாதவ் படைத்துள்ளார்.

Advertisement
Suryakumar Yadav becomes second batter to score 1000 runs in T20Is in a calendar year
Suryakumar Yadav becomes second batter to score 1000 runs in T20Is in a calendar year (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 06, 2022 • 05:24 PM

டி20 உலகக் கோப்பை 2022 சூப்பர் 12 சுற்று இன்றுடன் நிறைவுபெற உள்ளது.டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றின் கடைசி லீக் போட்டியில் இந்தியாவை எதிர்த்து ஜிம்பாப்வே அணி களமிறங்கியுள்ளது. இந்தியா ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிட்டதால், இப்போட்டியில் தோற்றாலும் பிரச்சினை இல்லை என்ற மனநிலையுடன் களமிறங்கி, டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
November 06, 2022 • 05:24 PM

இந்திய தொடக்க வீரர்கள் இத்தொடரில் இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளிலும் சிறப்பாக செயல்படவில்லை. இதனால், இன்று அதிரடியாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை. ரோஹித் ஷர்மா 15 ரன்களை மட்டும் சேர்த்து நடையைக் கட்டினார். ரோஹித் 5 போட்டிகளிலும் 13 சராசரியுடன் 52 ரன்களை மட்டுமே பவர் பிளேவில் சேர்த்திருக்கிறார். அதில் 4 முறை ஆட்டமிழப்பும் இருக்கிறது. ஒரேயொரு போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக மட்டுமே பவர் பிளேவை தாண்டி விளையாடியிருக்கிறார்.

Trending

மற்றொரு வீரர் கேஎல் ராகுல் கடந்த இரண்டு போட்டிகளில் மட்டுமே சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த போட்டியில் வங்கதேசத்திற்கு அரை சதம் அடித்ததுமே ஆட்டமிழந்த அவர், தற்போது ஜிம்பாப்வேவுக்கு எதிராகவும் 51 அரை சதம் அடித்த அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து விராட் கோலி 26 , ரிஷப் பந்த் 3 ஆகியோரும் சிறப்பாக செயல்படவில்லை. இதனைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அப்போது ஹார்திக் நிதானமாக விளையாட, சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து காட்டடி அடித்து ரன்களை சேர்க்க ஆரம்பித்தார். 

அப்போது கடைசி ஓவரில் ஹார்திக் 18 ரன்கள் சேர்த்த நிலையில் பெரிய ஷாட்டுக்கு முயற்சி செய்து, பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் சூர்யகுமார் கடைசி நான்கு பந்துகளில் 6,2,4,6 என 18 ரன்களை குவித்தார். இதனால், இந்திய அணி 20 ஓவர்களில் 186/5 ரன்களை சேர்த்தது. சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 61 ரன்களை சேர்த்தார்.

இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் முதல் பந்திலிருந்தே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 17.1 ஓவர்களிலேயே அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. 

இந்நிலையில் இப்போட்டியில் சூர்யகுமார் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்ததன் மூலம், டி20 கிரிக்கெட்டில் ஒரு வருடத்தில் ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இதற்குமுன், 2021ஆம் ஆண்டில் முகமது ரிஸ்வான் (1326) எடுத்திருந்தார். மொத்தம், இந்த இரண்டு பேர் மட்டுமே, டி20-யில் ஒரு வருடத்தில் ஆயிரம் ரன்களை கடந்திருக்கிறார்கள். மேலும் இந்திய அணி தரப்பில் இச்சாதனையைப் படைக்கும் முதல் வீரர் எனும் பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement