
மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது 59 ரன்கள் வித்தியாசத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தோல்வியைத் தழுவியதன் மூலம் ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் இழந்துள்ளது. மேற்கொண்டு இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார்.
இந்நிலையில் இப்போட்டியின் மூலம் சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் டெம்பா பவுமாவின் சாதனையை முறியடித்துள்ளார். அதன்படி இது டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 25+ ரன்கள் எடுத்த உலக சாதனையை சூர்யகுமார் யாதவ் சமன்செய்துள்ளார். முன்னதாக தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா 2019-20ஆம் ஆண்டி தொடர்ச்சியாக 13 முறை 25+ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்த நிலையில், அதனைத் தற்போது சூர்யகுமார் யாதவ் சமன்செய்து அசத்தியுள்ளார்.