சூர்யகுமர் மிகவும் அதிர்ஷ்டமுள்ள வீரர் - டாம் மூடி விமர்சனம்!
ஆசியக் கோப்பை இந்திய அணியில் இருக்கும் வீரர்களில் சூர்யகுமாரை பார்க்கும் பொழுது அவர் அதிர்ஷ்டத்தால் இருக்கிறார் என்று தோன்றுகிறது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு ரோஹித் சர்மா கேப்டன் ஆகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டன் ஆகவும் தொடர்கிறார்கள். அதே சமயத்தில் நட்சத்திர மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர் சஹால் நீக்கப்பட்டு இருக்கிறார். திலக் வர்மாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நல்ல சராசரியை வைத்திருக்கும் சஞ்சு சாம்சன் பேக் அப் வீரராக வைக்கப்பட்டு இருக்கிறார். தொடர்ச்சியாக ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் மிக மோசமாக செயல்பட்டு வரும் சூரியகுமார் யாதவ் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
Trending
இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி, “ஆசியக் கோப்பை இந்திய அணியில் இருக்கும் வீரர்களில் சூர்யகுமாரை பார்க்கும் பொழுது அவர் அதிர்ஷ்டத்தால் இருக்கிறார் என்று தோன்றுகிறது. அவர் நாம் பார்க்க விரும்பும் ஒரு வீரர் என்று எனக்குத் தெரியும். ஆனால் அவர் இன்னும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் எப்படி விளையாடுவது என்று தேர்ச்சி பெறவில்லை.
இந்த வடிவத்தில் 20 போட்டிகளுக்கும் மேல் விளையாடி அவர் மிகவும் சுமாரான செயல்பாட்டையே காட்டி இருக்கிறார். டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை சூர்யகுமார் யாதவ் ஒரு மேதை. ஆனால் 50 ஓவர் கிரிக்கெட் வடிவம் முற்றிலும் மாறுபட்டது. அவர் அதற்கான சூட்சுமத்தை இன்னும் அடையவில்லை. அதே சமயத்தில் கடைசி வரை அவர் அதைச் செய்ய முடியாது என்று நான் கூறவில்லை.
என்னைப் பொறுத்தவரை இவருக்கு பதிலாக தேர்ந்தெடுக்க இன்னும் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். நான் அங்கே இருந்திருந்தால் ஜெயஸ்வாலை தேர்ந்தெடுத்து இருப்பேன். இல்லையென்றால் அந்த இடத்திற்கு ஒரு மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளரை கொண்டு வந்து இருப்பேன். அவர் யார் என்று உங்களுக்கே தெரியும்!” என்று கூறி இருக்கிறார்.
Win Big, Make Your Cricket Tales Now