
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது நடப்பு உலகக்கோப்பை தொடரில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகள் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்நிலையில் இந்திய அணி தங்களது ஐந்தாவது லீக் ஆட்டத்தில் நாளை தர்மசாலாவில் நடைபெற இருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாட இருக்கிறது.
இந்நிலையில் கடந்த வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் போது காயமடைந்த ஹார்டிக் பாண்டியா நாளைய போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தான் ஹார்திக் பாண்டியா மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்று கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வீரர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹார்திக் பாண்டியாவின் இடத்திலேயே மாற்று வீரராக இடம்பெறப்போவது யார்? என்பது குறித்த கேள்வி அதிகரித்து வரும் வேளையில் தற்போது இந்திய அணியின் மற்றொரு முக்கிய ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் காயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ரவீந்திர ஜடேஜாவிற்கு ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்திலேயே காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா? என்பது குறித்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.