
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்துள்ள 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளன. இந்த தொடரின் மீதான பரபரப்பை விட, பிட்ச்-ல் குளறுபடி நடந்ததா என்ற பேச்சு தான் பரபரப்பாக உள்ளது. இதற்கெல்லாம் காரணம் கேப்டன் ஹர்திக் பாண்டியா வைத்த குற்றச்சாட்டு தான்.
அதாவது முதல் டி20ல் யாரும் எதிர்பார்க்காத வகையில் 2வது இன்னிங்ஸில் பிட்ச்-ல் அதிக ஸ்பின் இருந்தது. 2வது டி20 ஒருபடி மேல் சென்று 2 இன்னிங்ஸ்களிலும் ஏகபோகத்திற்கு ஸ்பின் இருந்தது. மொத்தமுள்ள 40 ஓவர்களில் 30 ஓவர்களை ஸ்பின்னர்கள் மட்டுமே வீசினர். இதில் ஒரு சிக்ஸர்கள் கூட செல்லவில்லை. குறிப்பாக 100 ரன்களை மட்டுமே இலக்காக வைத்து, அதையும் இந்தியா தடுமாறி எட்டியது.
இதுகுறித்து பேசியிருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா, “2 டி20க்களிலும் ஏற்படுத்தப்பட்ட பிட்ச்-கள் அதிர்ச்சியை தந்தன. இவை டி20க்கு ஏற்ற களங்களே கிடையாது. பிட்ச் குரேட்டர் கடைசி நேரத்தில் மாற்றங்களை செய்தால் இப்படி தான்” ஆகும் என விளாசியிருந்தார். நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னரும் தோல்விக்கு காரணமாக இதையே தான் கூறினார்.