
ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் மும்பை 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் சோ்த்தது. அடுத்து குஜராத் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்களே எட்டியது.
இதில், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை வீரா் சூா்யகுமாா் யாதவ், ஐபிஎல் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தாா். 49 பந்துகளில் 103 ரன்கள் எடுத்தார். சர்வதேச டி20யில் 3 சதத்தினை அடித்திருந்தாலும் இதுதான் ஐபிஎல்லில் அவரது முதல் சதம். இந்நிலையில் அவரது அதிரடியான ஆட்டத்தை பலரும் பாராட்டி வருகின்றன.
.@surya_14kumar lit up the evening sky today!
— Sachin Tendulkar (@sachin_rt) May 12, 2023
He played excellent shots through the innings but the one that stood out for me was the 6 over third man off @MdShami11.
The way he opened the face of the bat to create that angle off the blade at the same time is very very tough to…