
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பந்துவீசவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிதிஷ் குமார் மற்றும் ரிங்கு ரிங் ஆகியோரது அரைசதத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும், 221 ரன்களை குவித்தது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய நிதிஷ் குமார் ரெட்டி 34 பந்தில் 74 ரன்களையும், ரிங்கு சிங் 29 பந்துகளில் 53 ரன்களையும் சேர்க்க, ஹர்திக் பாண்டியா தனது பங்கிற்கு 32 ரன்களைக் குவித்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார்.
வங்கதேச அணி தரப்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட், தஸ்கின் அகமது, தன்சிம் அகமது, முஸ்தஃபிசூர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியானது இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அந்த அணியில் மஹமதுல்லா மட்டும் தனி ஆளாகப் போராடி 41 ரன்கள் எடுத்தார்.