
'Suryakumar Yadav one of the best T20 batters in the world': South Africa's Wayne Parnell (Image Source: Google)
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் சூர்யகுமார் 33 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை கௌகாத்தியில் இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது. இதற்காக இரு நாட்டு வீரர்களும் கௌகாத்தி சென்று தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்போதைய சூழ்நிலையில் உலகின் சிறந்த டி20 பேட்ஸ்மேன் இந்திய வீரர் சூர்யகுமார் தான் என்று தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் வெய்ன் பர்னெல் தெரிவித்துள்ளார்.