
இந்திய அணியில் வளர்ந்துவரும் வீரரான சூர்யகுமார் யாதவ், ஐபிஎல்லிலும் உள்நாட்டு போட்டிகளிலும் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது.
தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய சூர்யகுமார் யாதவ், தற்போது இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் முக்கியமான வீரராகவும், டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் முக்கியமான வீரராகவும் பார்க்கப்படுகிறார்.
இந்நிலையில், தனது ஐபிஎல் ஆல்டைம் சிறந்த லெவனை சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்துள்ளார். அவரது அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் ஆகிய இருவரையும் தேர்வு செய்த சூர்யகுமார் யாதவ், 3ஆம் வரிசையில் விராட் கோலியையும் 4ஆம் வரிசையில் தன்னையும் தேர்வு செய்துள்ளார்.