இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் சூழலில் தொடரை கைப்பற்றும் வாய்ப்புள்ள 4வது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.
ஃபார்ம் அவுட்டில் இருந்த இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ், கடந்த 4ஆவது போட்டியின் போது அட்டகாசமான கம்பேக் கொடுத்தார். 44 பந்துகளை சந்தித்த அவர் 76 ரன்களை குவித்தார். மேலும் ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசைப்பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேறி அசத்தினார். இந்நிலையில் தற்போது மற்றொரு உச்சத்தை எட்ட வாய்ப்புள்ளது.
ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தான் கடந்த ஓராண்டுகளாக முதலிடத்தில் இருந்து வருகிறார். ஆனால் இன்று அந்த இடத்தை சூர்யகுமார் யாதவ் பிடிக்கலாம். பாபர் அசாம் தற்போது வரை 818 புள்ளிகளுடன் இருக்கிறார். அவர் அடுத்ததாக ஆசியக்கோப்பை தொடரில் தான் டி20 கிரிக்கெட் விளையாடவுள்ளார். எனவே வெறும் 2 புள்ளிகள் மட்டுமே பின்தங்கி உள்ள சூர்யகுமார் இன்று பாபரை முந்துவார்.