
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கி நடைபெற்றுவருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியானது இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியதுடன், தொடரின் ஆரம்பத்திலேயே புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால் அந்த அணி தங்களது முதல் வெற்றியைப் பெறும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. மேலும் நடப்பு சீசன் மும்பை இந்தியன்ஸ் அணியின் இடம்பிடித்திருந்த நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக முதல் சில போட்டிகளை தவறவிட்டார். இந்நிலையில் காயத்திலிருந்து மீண்டுள்ள அவர், தற்போது முழு உடற்தகுதியை எட்டியுள்ளதாகவும், இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்றும் தேசிய கிரிக்கெட் அகாடமில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தற்போது சூர்யகுமார் யாதவ் முழு உடற்தகுதியை எட்டியுள்ளதாகவும், இதன்மூலம் டெல்லி கேப்பில்லஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதுள்ள சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் இணைவது அந்த அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. அதன்படி சூர்யகுமார் யாதவ் இடம்பெறும் பட்சத்தில் அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பதை பார்ப்போம்.