ரஞ்சி கோப்பை: முதல் ஆட்டத்திலேயே அதிரடி காட்டிய சூர்யகுமார்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஹைதராபாத் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரஞ்சிக் கோப்பை தொடர் தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.இதில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள மும்பை அணி, ஹைதராபாத் அணிக்கு எதிராக களமிறங்கி விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இப்போட்டியில் முதலில் களமிறங்கிய மும்பை அணியில் தொடக்க வீரர் பிரித்வி ஷா 21 பந்துகளில் 4 பவுண்டரி உட்பட 19 ரன்களை மட்டும் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து யாஷஸ்வி ஜெய்ஷ்வால், சூர்யகுமார் யாதவ் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை குவிக்க ஆரம்பித்தார்கள். ஒருபக்கம் ஜெய்ஷ்வால் நிதானமாக விளையாடி வந்த நிலையில், மறுபக்கம் சூர்யகுமார் யாதவ் வழக்கம்போல, அதிரடி பாணியில் ரன்களை சேர்க்க ஆரம்பித்தார்.
Trending
சூர்யகுமார் கடந்த 3 ஆண்டுகளாக டெஸ்ட் விளையாடியது கிடையாது. இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியம் என சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார். இந்நிலையில், டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பதற்காக தற்போது ரஞ்சிக் கோப்பை தொடரில் விளையாட முடிவு செய்து, களமிறங்கியுள்ள நிலையில் முதல் போட்டியிலேயே ஹைதராபாத் அணிக்கு எதிராக ரன்களை குவித்து, நான் யார் என்பதை நிரூபித்துள்ளார்.
இப்போட்டியில் மொத்தம் 80 பந்துகளை எதிர்கொண்ட சூர்யகுமார் யாதவ் அதில் 15 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 90 ரன்களை குவித்து, சதத்தை தவறவிட்டார். சூர்யகுமார் மூன்று வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் விளையாடியுள்ள நிலையில், முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே ரன்களை குவித்திருப்பதால், அவருக்கு விரைவில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி, அடுத்து ஜனவரி இறுதி முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now