
Suspended By Baroda, Deepak Hooda Proves His Worth In IPL (Image Source: Google)
நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது.
இப்போட்டியில் பஞ்சாப் அணிக்காக களமிறங்கிய தீபக் ஹூடா 19 பந்துகளில் அரைசதம் கடந்து எதிரணியை மிரளவைத்தார். முன்னதாக இந்தாண்டு நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் தீபக் ஹூடா விளையாட அனுமதிக்கப்படவில்லை.
கடந்த 11 ஆண்டுகளாக பரோடா அணிக்காக விளையாடிவரும் தீபக் ஹூடா அந்த அணியின் துணைக்கேப்டனாகவும் இருந்துவந்தார். இந்நிலையில் தான் பரோடா அணியின் கேப்டன் குர்னால் பாண்டியா தன்னை தரக்குறைவான வார்த்தைகளில் திட்டினார் என ஹூடா கடிதம் ஒன்றை பிசிசிஐக்கு அனுப்பினார்.