
Suzie Bates Stars In New Zealand's 62 Run Win vs India In 1st ODI (Image Source: Google)
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க வீராங்கனை சூஸி பேட்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய செத்தர்வைடும் அரைசதம் கடந்தார்.
இதன் காரணமாக 48.1 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 275 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சூஸி பேட்ஸ் 106 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் கோஸ்வாமி, வஸ்த்ரேகர், கெய்க்வாட், தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.