
Suzie Bates Stars In New Zealand's 9-Wicket Win Over Bangladesh (Image Source: Google)
மகளிர் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற லீக் அட்டத்தில் நியூசிலாந்து - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழை பெய்த காரணத்தில் ஆட்டம் 27 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி 27 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஃபர்கானா ஹோக் 52 ரன்களைச் சேர்த்தார். நியூசிலாந்து தரப்பில் ஏமி சத்தர்வைட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.