
Sydney Sixers Sign Shafali Verma, Radha Yadav For Upcoming WBBL (Image Source: Google)
மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மகளிர் பிக் பேஷ் டி20 தொடரை நடத்திவருகிறது. இதுவரை ஆறு சீசன்கள் நடைபெற்றுள்ள இத்தொடரின் ஏழாவது சீசன் அக்டோபர் 14ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்காக அனைத்து பிக் பேஷ் மகளிர் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் இத்தொடரின் அணிகளில் ஒன்றான சிட்னி சிக்சர்ஸ் அணி இரு இந்திய வீராங்கனைகளை தங்கள் அணியில் ஒப்பந்தம் செய்துள்ளது.
அதன்படி இந்திய அணி அதிரடி தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா, ராதா யாதவ் ஆகியோர் நடப்பு சீசன் பிக் பேஷ் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணியில் விளையாட ஓப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.