Advertisement
Advertisement
Advertisement

பிபிஎல் 2023: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தியது சிட்னி தண்டர்!

மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 25, 2023 • 22:38 PM
Sydney Thunder win by 3 wickets and seal their spot in the Final Five of BBL 12!
Sydney Thunder win by 3 wickets and seal their spot in the Final Five of BBL 12! (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேவில் பிரபலமான பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 56ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தார்.

அதன்படி களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் டாம் ரோஜர்ஸ் 36 ரன்களையும், கார்ட்ரைட் 36 ரன்களையும் சேர்த்தனர்.

Trending


அவர்களைத் தவிர நட்சத்திர வீரர்களான ஜோ கிளார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ், வெப்ஸ்டர், காம்பெல் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். சிட்னி தண்டர் அணி தரப்பில் உஸ்மான் காதிர் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் கிரீன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சிட்னி தண்டர் அணிக்கும் தொடக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், மேத்யூ கில்க்ஸ், ஜேசன் சங்கா, ஒலிவியர் டேவிஸ், அலெக்ஸ் ரோஸ் என அனைவரும் அடுத்தடுத்து கணிசமான ரன்களைச் சேர்த்து விக்கெட்டுகளை இழந்தனர்.

அதன்பின் களமிறங்கிய டேனியல் சாம்ஸ் அதிரடியாக விளையாடி 28 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இருப்பினும் அந்த அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 3 விக்கெட் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிறிஸ் கிரீன் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement