
T10 League: Bangla Tigers beat Deccan Gladiators by 9 wickets (Image Source: Google)
டி10 கிரிக்கெட் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் பங்களா டைகர்ஸ் - டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களா டைகர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய டெக்கான் அணி 10 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக டாம் பாண்டன் 30 ரன்களைச் சேர்த்தார். பங்களா டைகர்ஸ் அணி தரப்பில் பென்னி ஹௌல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.