
T10 League: Deccan Gladiators beat Bangla Tigers by 62 runs (Image Source: Google)
டி10 லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் - பங்களா டைகர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற டைகர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய கிளாடியேட்டர்ஸ் அணியில் கொஹ்லர் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி எதிரணியை திணறடித்தார்.
அதன்பின் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொஹ்லர் 39 பந்துகளில் 12 பவுண்டரி, 5 சிக்சர்களை விளாசி 96 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.