
T10 League: Northern Warriors beat Chennai Braves by 19 runs (Image Source: Google)
டி10 கிரிக்கெட் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை பிரேவ்ஸ் - நார்த்தன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நார்த்தன் வாரியர்ஸ் அணி மொயீன் அலி, கென்னர் லூயிஸ் ஆகியோரது அதிரடியான தொடக்கத்தினால் 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக மொயின் அலி, கென்னர் லூயிஸ் இருவரும் தலா 49 ரன்களைச் சேர்த்து நூழிலையில் அரைசதத்தை தவறவிட்டனர்.